கருத்தடை முறைகளைப் பின்பற்றுவோருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் உண்டா?
மூன்று மாதங்களுக்கோ, ஆறு மாதங்களுக்கோ எடுத்துக்கொள்வது தவறில்லை. இரண்டு வருடங்களைத் தாண்டி உபயோகிக்கும்போது தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் கூடும். எனவே தான் மருத்துவர்கள் இத்தகைய மாத்திரைகளை நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப் பரிந்துரைப்பதில்லை.
ஸ்ட்ரெஸ்ஸுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?
நிச்சயம் தொடர்புண்டு. ஸ்ட்ரெஸ் இருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். அதனால் ரிஸ்க் அதிகரிக்கலாம்.
புற்றுநோய் இரண்டு மார்பகங்களையும் தாக்குமா?
சிலருக்கு ஒரே நேரத்தில் ரெண்டு மார்பகங்களிலும் பாதிப்பு வரலாம். சிலருக்கு ஒரு மார்பகத்தில் மட்டும் வரலாம். சிலருக்கு வேறு வேறு காலகட்டத்தில் எந்த மார்பகத்திலும் புற்றுநோய் பாதிப்பு வரலாம்.
மார்பகங்களை அகற்றுவதுதான் தீர்வா?
20 வருடங்களுக்கு முன், மார்பகப் புற்றுநோய் வந்தால் மார்பகங்களை முழுவதும் நீக்கிவிடுவார்கள். ஆனால், இப்போது அப்படி கிடையாது. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும்போது, மார்பகத்தைப் பாதுகாக்கலாம். இதுவே இரண்டாம் நிலை அல்லது கடைசி நிலையில வரும்போது, மார்புக்குள்ளேயே அது அதிகம் பரவியிருக்கும். அப்போது மார்பகததைப் பாதுகாக்க முடியாது. அந்நிலையில் மார்பகத்தை முழுதாக நீக்கிவிட்டு, நம் உடலுக்குள்ளேயே இருக்கும் திசுக்களைக் கொண்டு மார்பக வடிவத்தில் ரீகன்ஸ்ட்ரக்ஷன் சிகிச்சை செய்துகொள்ளலாம்.