தீபாவளிக்கு முறுக்கு சுட தயாராகிட்டீங்களா..? இந்த ரெசிபியை கொஞ்சம் கவனிங்க…

Share

தென்னிந்திய பலகார வகைகளில் முறுக்கு தவிர்க்க முடியாதது. குறிப்பாக பண்டிகைகள், வீட்டு விசேஷங்களிலும் முறுக்குக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு முறுக்கு சுட தயாராகிவிட்டீர்கள் எனில் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்.

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

முறுக்கு அரிசி மாவு – 1 கப்

உளுந்தம் பருப்பு – 3 டீ ஸ்பூன் அளவு

வெள்ளை எள் – 1 டீ ஸ்பூன் அளவு

நெய் – 2 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – ¼ டீ ஸ்பூன்

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – ½ லிட்டர்

உப்பு – தேவையன அளவு

செய்முறை

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, இளம் சூட்டில் சூடேற்றவும். இதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதை ஆறிய பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது உளுந்து மாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், சீரகம், அரிசி மாவு, நெய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

இப்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருக்க வேண்டும். பிசைந்த மாவை அப்படியே உருண்டை பிடித்து எடுக்கவும். அந்த உருண்டைகளை முறுக்கு அச்சு உள்ளே வைத்து, பிழிவதன் மூலமாக பச்சை மாவு அச்சுகளை பெறவும்.

தீபாவளிக்கு சோமாசு செய்ய போறீங்களா..? இந்த முறை இப்படி செஞ்சு பாருங்க…

பிறகு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில், இந்த முறுக்கு அச்சுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். முறுக்கு நல்ல பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும். அவ்வப்போது திருப்பி விட்டு, நன்றாக வேக வைக்கவும்.

இறுதியாக முறுக்கை எடுத்து ஆற வைத்து, காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளவும்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com