தீபாவளி இனிப்புகளைச் சாப்பிட்டு திகட்டுகையில், நம் வாயும் கையும் தேடுவது கார ஸ்நாக்ஸைதான். ஸ்வீட்ஸ் ஒரு கடி, காரமான தட்டை ஒரு கடி என்று தீபாவளியைக் கொண்டாட இங்கே சில கார வகைகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். ஹேப்பி தீபாவளி!
தேவையானவை:
அரிசி மாவு – 1 கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
எள் – 2 சிட்டிகை
சீீரகம் – 2 சிட்டிகை
எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் விடாமல் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான முறுக்கு மாவாகப் பிசையவும். 3 கண் உள்ள தேன்குழல் அச்சில் மாவை விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில், பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால், வாசனையான மொறு மொறு பாசிப்பருப்பு முறுக்கு தயார்.