Doctor Vikatan: ஒருவருக்கு உடலில் எங்காவது புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க வசதி உள்ளதா? நாமே கண்டுபிடிக்க முடிந்தால், என் போன்ற முதியவர்கள் அலர்ட் ஆக முடியுமே?
லட்சுமி ஆறுமுகம், விகடன் இணையதளத்தில் இருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.
அறிகுறிகளை வைத்துதான் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகித்து, டெஸ்ட் செய்து அதை உறுதி செய்ய முடியும். புற்றுநோய்க்கான டெஸ்ட்டை பொதுவாக `கேன்சர் ஸ்கிரீனிங்’ என்று சொல்கிறோம். ஒவ்வோர் உறுப்புக்கும் இப்படித் தனித்தனியே `கேன்சர் ஸ்கிரீனிங்’ செய்ய முடியும்.