Doctor Vikatan: வீட்டிலேயே பிபி அளவை டெஸ்ட் செய்வது சரியானதா? | Doctor vikatan – Is home BP test right

Share

ரத்த அழுத்தம் என்பது பல விஷயங்களால் மாறக்கூடியது. உதாரணத்துக்கு சிரித்தால் அதிகமாகும். நடைப்பயிற்சி செய்யும்போது அதிகரிக்கும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நார்மலாகும். கோபப்பட்டால் அதிகமாகும். எனவே, இது புரியாமல் 120/80 இல்லையே என்று புலம்புவார்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி நம் உணர்வுகள், உடற்பயிற்சிகள், உடல் இயக்கங்கள் என எல்லாவற்றுக்கும் ரத்த அழுத்தத்துடன் தொடர்புண்டு. மாறாக ஒருவருக்கு தொடர்ந்து பிபி அளவு 140/90 என அதிகமாகவே இருந்தால் அதை அசாதாரணம் என்று அலர்ட் ஆகலாம்.

நீங்கள் பிபி அளவைப் பரிசோதிக்கும் நேரத்தைக் கவனியுங்கள். பரபரப்பான வேலைகள் செய்த உடனேயோ, ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போதோ பிபி அளவை டெஸ்ட் செய்யாமல், ரெஸ்ட் எடுத்துவிட்டுச் செய்து பாருங்கள். அப்போதும் பிபி அளவு அசாதாரணமாக, அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்
PIXABAY

பொதுவாகவே, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது ஒருவருக்கு பக்கவாதம் பாதிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, உங்கள் பிபி அளவு 200-ஐத் தாண்டும்போது நீங்கள் அலர்ட் ஆக வேண்டும். அதன் பிறகும் வீட்டில் இருந்தபடியே அதை டெஸ்ட் செய்து பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com