நாள்தோறும் உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு, நேரத்தோடு சாப்பிட்டு, சரியான நேரத்தில் இரவுத்தூக்கம், குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது என நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக் கொண்டால் இதயமும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.
இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மருத்துவர் வினோத் சுப்ரமணியன் பேசியதாவது: ஒரு நோயாளி மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி என்ற அறிகுறியுடன் வந்தால், இதய மருத்துவர் அவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார்.
அப்படிக் கண்டறியும்போது எந்தெந்த ரத்தநாளங்களில் எத்தனை சதவிகிதம் அடைப்பு உள்ளது, எந்த நிலையில் உள்ளது, தீவிரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆஞ்சியோகிராம் பரிசோதனையின் மூலம் கண்டறிவார்கள். ஆஞ்சியோகிராம் மற்றும் ஈசிஜி பரிசோதனைகளின் அடிப்படையில் வேறு வால்வுகளில் ஏதேனும் கசிவு இருக்கிறதா என்றும் கண்டறிவார்கள். மேலும் எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையைத் திட்டமிட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பார்கள்.