ஓபிஎஸுடன் இணைந்து செயல்பட இனி வாய்ப்பில்லை – இபிஎஸ் திட்டவட்டம்!
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்கள் 100 சதவிகிதம் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. அதிமுகவில் இனி அவர்களுக்கு இடமில்லை; அதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.