திருப்போரூர்: நண்பனின் காதலியை தவறாகப் பேசிய இளைஞர் கொலை! – பச்சை குத்தியதால் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் | police arrested youngsters who murdered their friend

Share

இது குறித்து போலீஸார் கூறுகையில் “கொலைசெய்யப்பட்ட லட்சுமிகாந்த்தும் கைதான பிரதீப்பும், சதீஷ்கண்ணனும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பிரதீப்பின் காதலியை லட்சுமிகாந்த் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், நண்பன் என்றுகூட பாராமல் லட்சுமிகாந்த்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதை சதீஷ்கண்ணன் தடுத்துள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தின் தலையில் கல்லை போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

சதீஷ்கண்ணன்

சதீஷ்கண்ணன்

லட்சுமிகாந்த் உடலில் பிரதீப் என பெயர் பச்சைக் குத்தப்பட்டதை அடிப்படையாக வைத்து அவரின் நண்பனான பிரதீப்பிடம் விசாரணை நடத்தினோம். பின்னர் பிரதீப் அளித்த தகவலின்படி அவரின் நண்பன் சதீஷ்கண்ணனை கைதுசெய்துள்ளோம். இவர்கள் அனைவரும் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவர்கள். கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளனர்” என்றனர்.

கொலையாளிகளை ஆறு மணி நேரத்திலேயே அடையாளம் கண்டு கைது செய்த கேளம்பாக்கம் போலீஸாரை கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com