கோவிட்டினால் நீண்ட பாதிப்புக்கு உள்ளானோர் தங்களுக்கு நெகட்டிவ் என்று பிறகு வந்தாலும் தாங்கள் ஆரோக்கியமாக உணர்வதில்லை என்கின்றனர். கடும் களைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், உடல் வலி, நாடித்துடிப்பில் இயல்பின்மை, தலைவலி, சரும நோய், நெஞ்சு வலி, வயிற்றுப்போக்கு, ரத்த தமனிகளில் ரத்தக்கட்டு, வாசனை தெரியாமை, ருசி தெரியாமை ஆகியவற்றை உணர்வதாக நோயாளிகள் பலர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகும் தெரிவிக்கின்றனர்.
நுரையீரல் மற்றும் காசநோய் நிபுணர் டாக்டர் நிகில் நாராயண் பாண்ட்டே என்ன கூறுகிறார் என்றால், “கொரோனா வந்து மீண்ட நோயாளிகளில் 50 முதல் 70% நோயாளிகளுக்கு சில வகை நோய்களின் அறிகுறிகள் ஒரு 3 அல்லது 6 மாதக் காலத்தின் தென்படலாம்” என்கிறார். இதோடு மனக்கவலை, பதற்றம், மறதி, ஆகியவையும் சிலருக்கு ஏற்படுகிறது. முதலில் லாங் கோவிட் அறிகுறிகள் வயதானோருக்கு மட்டுமே இருந்தது என்று கருதினால் இப்போது அனைத்து வயதினருக்கும் இது ஏற்படுவதை பார்க்கிறோம் என்கிறார் டாக்டர் வர்கீஸ். மேலும் குழந்தைகளுக்கு ரத்தக்குழாய் ரத்தக் கட்டு ஏற்படுவதையும் பார்க்கிறோம், கோவிட் பாதித்து மீண்ட குழந்தைகளின் மனநல பிரச்னைகளை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்கிறார்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில பக்க விளைவு கள் ஏற்படுகின்றன. பக்க விளைவுகள் இல்லாத அல்லது குறைந்த அளவு பக்க விளைவுகளுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
பக்க விளைவுகளை குறைக்கவும், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தயாராக இருக்க வேண்டும்.அந்த வகையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு இந்த வழிமுறைகள் பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். பெரும்பாலும் கடுமையான கொரோனாவுக்குக் கொடுக்கப்படும் கடும் ஸ்டீராய்ட் மருந்துகளினால்தான் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் துணிபு எனவே ஸ்டீராய்ட் சிகிச்சையை கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.