புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு – பின்வாங்க மறுக்கும் அரசு

Share

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக

மின்துறை தனியார்மயத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தனியார் டெண்டரில் இருந்து பின்வாங்க முடியாது என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

“லாபத்தில் இயங்கக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையைத் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததில் அவர் பெற்ற நல்ல பெயரை முதல்வர் ரங்கசாமி இழக்க நேரிடும்,” சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கி வரும் அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஆரம்பகட்ட வேலையை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியது. இதை கண்டித்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கினர். அதன் மூலமாக புதுச்சேரி அரசின் இந்த நடவடிக்கையைக் கைவிடக் கோரி போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினர். ‘தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம்,’ என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதியை ஏற்று சில நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com