சட்டம்பி சினிமா புரமோஷன் நேர்காணல் பெண் தொகுப்பாளரிடம் ஆபாசமாக பேசிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது | Malayalam actor Srinath Pasi arrested

Share

இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொச்சி மரட் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீநாத் பாஸிக்கு அறிவிப்பு கொடுத்திருந்தனர். ஸ்ரீநாத் பாஸி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மதியத்துக்கு மேல் அவர் மரட் காவல் நிலையத்தில் ஆஜரானார். காவல் நிலையத்தில் ஆஜரான ஸ்ரீநாத் பாஸியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால், பெண் தொகுப்பாளரை கெட்டவார்த்தையால் திட்டவில்லை என ஸ்ரீநாத் பாஸி தெரிவித்துள்ளார். `என்னிடம் மோசமாக நடந்து கொண்டதால், சாதாரண மனிதனாக நான் என் எதிர்ப்பை தெரிவித்தேன்’ எனவும் ஸ்ரீநாத் பாஸி கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீநாத் பாசி

நடிகர் ஸ்ரீநாத் பாசி

ஸ்ரீநாத் பாஸியிடம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் ஸ்டேஷன் ஜாமினில் அவரை விடுவித்தனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீடியாவிடம் எதுவும் பேச விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் கூறிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தில், பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீநாத் பாஸியையும், `சட்டம்பி’ சினிமா தயாரிப்பாளரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com