ஆர்டிக் பெருங்கடல் பனிக் கட்டிகளின் தடிமனை அளவிட புதிய கண்டுபிடிப்பு

Share

  • ஜொனாதன் அமோஸ்
  • அறிவியல் நிருபர்

ஆர்டிக் பெருங்கடல்

பட மூலாதாரம், AWI/S.GRAUPNER

ஆர்டிக் பெருங்கடல் மீது படிந்துள்ள பனிப்படலத்தின் தடிமன் அளவை இனி செயற்கைக் கோள் உதவியோடு கணக்கிடலாம். ஆண்டு முழுவதும் அளவிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்டிக் கடலில் மிதக்கும் பனி பகுதிகளை முழுமையாக கண்டறிவதில் பாரம்பரிய விண்கலத்திற்கு பெரும் சிக்கல் இருந்தது. ஏனெனில், பனியின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் காரணமாக அளவிடும் கருவிகளால் அதை தெளிவாக கண்டறிந்து கணக்கிட முடியவில்லை.

இந்நிலையில், விஞ்ஞானிகள் ஆழ்ந்த கற்றல் தொழில்நுட்பங்கள் மூலம் எல்லா பருவங்களிலும் ஆர்டிக் கடல் மீது படர்ந்துள்ள பனி தொடர்பாக மிக துல்லியமாக தகவல் கிடைக்க செய்திருக்கிறார்கள்.

இந்தப் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, வரலாற்றில் ஒரு மைல்கல். இதன் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் பயணிக்கும் கப்பல்கள் இதனால் நிச்சயம் பலனடையும். அதாவது, ஆர்டிக் கடலின் எந்த பகுதி பயணிப்பதற்கு சிறந்தது என்பதை இத்தொழில்நுட்பத்தின் உதவியால் அறிந்து கொள்ளலாம். அதோடு, பருவநிலை மாறுபாடுகள், வானிலை நிலவரம் உள்ளிட்டவைகளின் தகவல்களையும் துல்லியமாக கண்டறிய முடியும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com