நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்… வைரலான வீடியோ; டாக்டர் மீது எஃப்.ஐ.ஆர்!

Share

விலங்குகளின் மீதான கொடூரமான தாக்குதல்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நாய் ஒன்றை காரில் கட்டி, காரை வேகமாக ஓட்டி நாயை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறது.

ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டுள்ளார். சாலையில் இன்னும் பல வாகனங்கள் சென்று கொண்டிருக்க, நாயை காரில் கட்டி வேகமாகச் சாலையில் ஓட்டி சென்றுள்ளார். காரின் வேகத்திற்குப் பிடிகொடுக்க முடியாமல், நாய் ஓடிக் கொண்டிருந்தது.

காரின் பின்னால் மோட்டார் வண்டியில் சென்றவர்கள், அதை வீடியோ எடுத்தனர். அதோடு அந்த வண்டியைக் கட்டாயப்படுத்தி நிறுத்தி உள்ளனர். சுற்றி இருந்த மக்கள், வண்டியைச் சூழ்ந்து கயிற்றிலிருந்து நாயை விடுவிக்கும்படி கூறியதோடு, சிலர் தொண்டு நிறுவனத்துக்கு இத்தகவலைத் தெரிவித்தனர். அதன்பின் அங்கு விரைந்த டாக் ஹோம் ஃபவுண்டேஷன் (Dog Home Foundation) தொண்டு நிறுவனத்தினர், நாயை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

டாக் ஹோம் ஃபவுண்டேஷன் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அந்தப் பதிவில்,“இந்த செயலை செய்தவர் டாக்டர் ரஜ்னீஷ் கால்வா. அந்த நாய்க்குக் காலில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை அதிகமாகப் பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் லைசென்ஸையும் நிராகரிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளது. அதோடு விலங்கு வதைச் சட்டத்தின் கீழ், இவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com