உடனடியாக அவர்கள், அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார், பாம்பு கழிவறையில் இருப்பதைப் பார்த்து வியந்ததோடு, அதைப் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டனர்.
“எங்கள் பணிநேரத்தின் போது என்ன மாதிரியான அழைப்புகள் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த நாள் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாளின் அழைக்காத விருந்தினரான பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதைப் பொருத்தமான இடத்தில் விட்டோம். அந்தப் பாம்பு பாதிப்பை ஏற்படுத்தாத சாரை பாம்பு (Gray Rat Snake) வகையைச் சேர்ந்தது” என்று பதிவிட்டுள்ளனர். இந்தப் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாம்பு அங்கிருந்து அகற்றப்பட்டாலும், மீண்டும் கழிவறைக்குள் வந்துவிடுமோ என பயம், அந்தக் குடும்பத்தினருக்கு அகல இன்னும் சில நாள்கள் பிடிக்கலாம் அல்லவா?