make curry leaf powder for idli dosa

Share

என்னதான் சட்னி வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டாலும் அவசர தேவைக்கு பொடி வகைகளை அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் கறிவேப்பிலை பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் அவசர தேவைக்கு உதவலாம். அதோடு கறிவேப்பிலையின் நன்மைகளையும் பெறலாம்.

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு – 4 tbsp

கடலைப்பருப்பு – 4 tbsp

தனியா – 1 tbsp

சீரகம் – 1 tbsp

மிளகு – 1/2 tbsp

காய்ந்த மிளகாய் – 10

கறிவேப்பிலை – 5 கைப்பிடி அளவு

உப்பு – 1/4 tbsp

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

முதலில் கறிவேப்பிலையை அலசி அதன் ஈரம் போக காய வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

வறுபட்டதும் தனியாவை வறுக்க வேண்டும். அதன் பின் சீரகம், மிளகை வறுத்துக்கொள்ளுங்கள்.

மாலையில் டீ டைமுக்கு பொருத்தமான முட்டை பணியாரம் : சட்டுனு செய்ய ரெசிபி இதோ…

அடுத்ததாக காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மொறு மொறுப்பாக வறுத்துக்கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைக்கும்போது அதில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்க வேண்டும்.

அரைத்ததும் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com