இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நாகசைதன்யா இன்டாகிராம் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். பத்துவருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். சமந்தாவின் பதிவிற்கு ரசிகர் ஒருவர் எங்களுக்காக இதை செய்ய வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனாளர் இந்த செய்தியை கேட்ட உடன் இதயம் நொறுங்கியதாக பதிவிட்டுள்ளார்.

Shitttttttt 💔
This Happened Really!🥺
It’s Really A Tough Situation!🤕#ChaySam #SamanthaAkkineni pic.twitter.com/zV5QtwU0Ia— Team Tamannaah ♥︎ (@TeamTamannaah) October 2, 2021
End of the Era 💔💔💔
Most lovable couples in TFI
Iia jarugutundi except cheyaledu 🥺🥺#ChaySam pic.twitter.com/4Dvi7cPXiT
— Mahesh_Mahi🔔 (@UrsMaheshMahi) October 2, 2021
Once you start Shipping , wish them to be together throughout the life and when they get married that happiness only a shipper can experience but after all this happiness such sudden news definitely breaks our heart🥺💔
And guess what we loose our hopes on love😣#ChaySam 💔
— kezie♥️ (@MsChittitherobo) October 2, 2021
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் ‘எஸ்’ என்று பெயரை மாற்றினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.