ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 35-வது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண மகாலில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியை பேசுவோம் என்ற தலைப்பில் தொகுப்பாளர் பேசியதில் நாளிதழில் காந்தியின் புகைப்படம் சிறிதளவு வந்துள்ளது எனவும் நரேந்திர மோடியின் புகைப்படம் பெரிய அளவு வந்து இருக்கிறது பாஜக அராஜகமாக நடந்து கொள்கிறார்கள் எனவும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
புத்தக கண்காட்சிக்கு போகலூர் சேர்ந்த பாஜக ஒன்றிய செயலாளர் அருள்மணி தனது குடும்பத்துடன் கண்காட்சிக்கு சென்று உள்ளார் அப்போது நிகழ்ச்சியில் நரேந்திரமோடியை தவறுதலாக பேச வேண்டாம் இது அரசியல் பொதுக்கூட்டம் இல்லை புத்தகக் கண்காட்சி என கூறியுள்ளார். அதற்கு நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறியுள்ளார்.
வாக்குவாதம் நடைபெற்றபோது…
பொது இடங்களில் நரேந்திரமோடியை தவறுதலாக பேசியதற்கு பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் புத்தக கண்காட்சி நடத்த அவர்களுக்கு இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு புத்தக கண்காட்சி போர்க்களமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மாற்றம் போலீசார்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.பின்பு நரேந்திர மோடியை தவறுதலாக பேசியவர்கள் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.