தூக்கத்துக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் பலரும் உணர்வதே இல்லை. இரவில் 9.30 மணி முதல் 10 மணிக்குள் தூங்குவதுதான் சரியான பழக்கம். அந்த நேரத்தில் தூங்கும்போதுதான் உடல் உறுப்புகளின் பழுதுபார்க்கும் வேலை சிறப்பாக நடக்கும். செல்கள் புத்துணர்வடையும். ஹார்மோன் சமநிலையின்மை சரிசெய்யப்படும்.
சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டுமானால், இரவில் கேட்ஜெட் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மாலை வேளைகளில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். டி.வி பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஸ்ட்ரெஸ்ஸைத் தூண்டும் விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இவை தவிர ஒருவரின் ஆளுமையும் இந்த விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. இனிப்பை பார்த்தால் சிறிதளவு மட்டும் எடுத்துக்கொண்டு திருப்தியடைபவர்களும் இருக்கிறார்கள். பெரிய பார் சாக்லேட்டையும் முழுவதுமாகச் சாப்பிட்டு முடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சாப்பிடுவதன் பின்னணியில் அவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏதேனும் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும்.
உங்களைப் போல பலருக்கும் இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாகத் தொடரும். அவர்கள் ஒரே இரவில் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த நினைப்பது சாத்தியமில்லை. அது உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் முதல்கட்டமாக ஆரோக்கியமான இனிப்புகளைச் சாப்பிடப் பழகலாம். அடுத்தகட்டமாக அளவைக் குறைப்பது சரியானதாக இருக்கும்.
இதையெல்லாம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி, உங்கள் உடலில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்து, அப்படியிருப்பின் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.