தேவையான பொருட்கள் :
வாழை இலை – 2
சோள மாவு – 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப்
முந்திரி – 10
கிர்ணி பழ விதைகள் – 20 கிராம்
எலுமிச்சை பழம் சாறு – 2 tbsp
ஏலக்காய் பொடி – 1/4 tsp
நெய் – 6 tbsp

செய்முறை :
முதலில் வாழை இலை சாறு தயார் செய்ய வேண்டும். அதற்கு இளசாகவும், முற்றியதாகவும் இல்லாதவாறு மீடியம் சைஸ் வாழை இலை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் அரைத்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சாறில் எலுமிச்சை சாறு விட்டு கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் சோள மாவு கால் கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதே கப்பில் சர்க்கரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இவை இரண்டையும் கலந்த பின் அரைத்த வாழை இலை சாறை ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.
சிக்கன் குழம்பே தோற்றுப்போகும் அளவிற்கு மீல் மேக்கர் கிரேவி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி…
இப்போது கடாய் வைத்து நெய் விட்டு முந்திரி மற்றும் கிர்ணி விதைகளை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் கலந்து வைத்துள்ள சோள மாவை கொட்டி நன்கு கிளறுங்கள். இடையிடையே மீதம் உள்ள நெய்யை விட்டு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
கிண்ட கிண்ட கெட்டிப் பதம் வரும். அப்போது ஒரு தட்டையான பாத்திரத்தில் நெய் தடவி அதில் கிண்டிய மாவை ஊற்றி அதன் மேல் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கிர்ணி விதைகளை தூவி ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
மறுநாள் எடுத்துப்பார்த்தால் அல்வா பதத்தில் கெட்டியாக தளதளவென வாழை இலை அல்வா ரெடியாகி இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.