* காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் ‘விலகும் யாத்திரை’ கோவாவில் இருந்து தொடங்கி உள்ளது. – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்* இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி அடைந்து வருவதை பார்த்து ஆளும் பாஜ உடனே காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.25 கோடி பேரம் பேசுவதாக தகவல் கிடைத்தது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்* பாஜவின் வன்முறை அரசியலும், அவர்களது கோபமும் நம்நாட்டு மக்களின் மனதை மிக ஆழமாக பாதித்து விட்டது. – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
சொல்லிட்டாங்க…
Share
