இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைக் காட்டும் 5 வரைபடங்கள்

Share

  • கீதா பாண்டே
  • பிபிசி நியூஸ், டெல்லி

முகமூடியுடன் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, பெண்களை குறித்த மனபான்மை மாற்றத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாட்டு மக்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“நமது நடத்தையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் பெண்களை அவமதிக்கிறோம். இத்தகைய நடத்தையில் இருந்து விடுபடுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் யோசனை தெரிவித்தார். தினசரி வாழ்க்கையில் பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான செயல்களையும் விட்டுவிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மக்களிடம் வலியுறுத்தினார்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு மதிப்பளிப்பது குறித்து பிரதமர் மோதி பேசுவது இது முதன்முறை அல்ல.

2014ஆம் ஆண்டு பிரதமர் மோதி ஆற்றிய முதலாவது சுதந்திர தின உரையின்போது, ”பாலியல் வல்லுறவுகளை பற்றி கேள்விப்படும்போது வெட்கத்தால் தலைகுனிய வேண்டியுள்ளது” என்று கூறி இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவுகளை கண்டித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com