தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? உடனே செய்ய வேண்டியது என்ன? | #VisualStory

Share

Prevent Suicide

தனிமையாக இருப்பதைத் தவிர்த்துவிட்டு முடிந்தவரை பெற்றோருடன், குடும்பத்துடன், நண்பர்களுடன், நேரத்தைச் செலவிட வேண்டும்.

Suicidal Thought

தற்கொலை எண்ணம் தோன்றுவதற்குக் காரணமான பிரச்னையை, நம்பகத்தன்மையுடைய யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Helpline call (Representational Image)

அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், `சினேகா’ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு பேசலாம். அல்லது 104 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறலாம்.

Friends (Representational Image)

தற்கொலைகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவை:

மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நண்பரோ, நெருக்கமானவரோ, நம்மிடம் அவர்களின் பிரச்னையை பகிரும்போது அதை உதாசீனப்படுத்தக் கூடாது.

Suicidal Thought

நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருவர் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால், `அப்படியெல்லாம் சொல்லாதே… விடு’ என்று அவரை மட்டுப்படுத்தாமல் அவருடன் மனம்விட்டுப் பேச வேண்டும்.

Suicide Prevention

அப்படிப் பேசும்போது கண்டிப்பாக அறிவுரை கூறவே கூடாது. அவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் பேசக்கூடாது. அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.

பேராசிரியை யாழினி

தற்கொலை செய்துகொள்ளும் பெரும்பாலானோர் திடீரென தற்கொலை செய்துகொள்வதில்லை. பல பிரச்னைகளை மேலும் மேலும் சந்தித்து, உதவ யாரும் இல்லாமல் வேறு வழியின்றியே இந்த முடிவுக்கு ஆளாகின்றனர். எனவே, அவர்களின் மனப் போராட்ட நாள்களில் அவர்களைக் கவனித்து, உதவி, காப்பாற்ற வேண்டும்.

வழிகாட்டியவர்: யாழினி, உளவியில் துறை பேராசிரியை, லயோலா கல்லூரி, சென்னை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com