நாட்டிற்குத் தேவையான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இங்கிலாந்து வங்கிக்கும், நாணயங்களைத் தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனத்துக்கும், புழக்கத்தில் உள்ள பணத்தை நீக்கி, மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இங்கிலாந்தில் 82 பில்லியன் பவுண்டுகள், 4.7 மில்லியன் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ராயல் மிண்ட் அறிவிப்பின் படி, மகாராணியின் உருவப்படம் கொண்ட 29 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19 திங்கள் அன்று நடைபெற உள்ளது.