இதுவரை 493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Share

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வார்டை பார்வையிட்ட பிறகு ம அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தலை காட்ட தொடங்கியுள்ளது. எழும்பூர் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதால் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வருகின்றனர். ஆந்திராவிலிருந்து ஒரு குழந்தை எழும்பூருக்கு மேல் சிகிச்சைக்கு வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கைவிடப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தரமணி கல்லுக்குட்டை பகுதியிலிருந்து நான்கு-ஐந்து குழந்தைகள் டெங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவனிக்கப்படாமல் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் குடிசைப்பகுதியாக உள்ளது. இந்த ஆண்டு இது வரை 493 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாரசிடாமல் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி சீனிவாசன் கூறுகையில், “குழந்தைகளுக்கு பாராசிடாமல் தவிர வேறு மருந்துகள் கொடுத்தால் பிளேட்லெட்( தட்டணுக்கள்) குறையக்கூடும். தட்டணுக்கள் குறைந்துள்ளதா என்பதை ஐந்து நாட்களுக்கு பிறகு தான் கண்டறிய முடியும். ஆனால் முதல் இரண்டு நாட்களில் செய்யப்படும் total blood count எனப்படும் பரிசோதனையிலேயே டெங்கு பாதிப்பாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே பாதிப்பு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் இரண்டாவது நாளிலேயே மருத்துவரை அணுகுவது அவசியம்” என்றார்.

Also Read : குழந்தைகளுக்கு அதிகரிக்கும் டெங்கு – எச்சரிக்கும் மருத்துவர்கள்

கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கையிருப்பில் 33 லட்சம் தடுப்பூசி உள்ளது. இன்னும் சில நாட்களில் மேலும் தடுப்பூசி வரும். எனவே ஞாயிற்றுகிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம் 30 ஆயிரம் முகாம்களில் நடைபெறுகிறது. மெகா தடுப்பூசி முகாமினால் செவிலியர்களுக்கு பணிச்சுமை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. அது உண்மையல்ல.

கொரோனா உச்சத்தில் இருந்ததை விட தற்போது வேலை பளு குறைந்துள்ளது. மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுகிழமை என்பதால் வேறு ஒரு நாள் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போராடும் செவிலியர்கள் கோரிக்கை குறித்து முடிவெடுக்க மூன்று பேர் குழு அமைக்கப்படும். 15 நாட்க்ளில் சுமூக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com