மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! – சினிமா பாணியில் நடந்த சம்பவம் | marriage stopped after the lover tries to knot her bride lover

Share

திருமணத்தை நிறுத்துவதற்காக, சதீஷ் முதல் நாள் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். அவர் மணப்பெண்ணின் நண்பர் என்று சொன்னதால், அங்கிருந்த யாருக்கும் அவர் மேல் சந்தேகம் வரவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாலிகட்டும்போது, மணமேடைவரை சென்றிருக்கிறார் சதீஷ். இந்த விஷயம் தெரிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

இந்த திருமணத்துக்கு ஆன செலவையும், பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டிருக்கிறார்கள். பணத்தைத் தருவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, சதீஷை காவல்துறையினர் கண்டித்து அனுப்பியிருக்கிறார்கள். தற்போது காதலித்தவருக்கே திருமணம் செய்துவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com