country jaggery kesari recipe | நாட்டு சர்க்கரை சேர்த்து கேசரி செய்திருக்கிறீர்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ… – News18 Tamil

Share

சிலர் சர்க்கரையை உடல் நலன் கருதி தவிர்த்து வருகின்றனர். அதற்கு மாற்றாக நாட்டு சர்க்கரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் சர்க்கரையை தவிர்ப்பதால் இனிப்பு வகைகளை தவிர்ப்பதுண்டு. எனவே முடிந்த வரை சர்க்கரை சேர்க்காத நாட்டு சர்க்கரை கலந்த ஸ்வீட் வகைகளையே சாப்பிட விரும்புகின்றனர். அந்த வகையில் நீங்கள் கேசரி விரும்பி எனில் இனி கவலை வேண்டாம். அதையும் இனி நாட்டு சர்க்கரை கலந்து செய்யலாம். எப்படி என மேலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்

நாட்டு சர்க்கரை – 1 கப்

தேங்காய் – 1/2 கப்

நெய் – 10 tsp

முந்திரி , திராட்சை , பாதாம் – 1/4 கப்

செய்முறை :

முதலில் நாட்டு சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

அதற்கு நாட்டு சர்க்கரையை கடாயில் கொட்டி பின் அதே கப்பில் 3 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

பாகு பதம் வர வேண்டாம். சர்க்கரை தண்ணீரில் கரைந்தால் போதும். சீராக கரைந்ததும் வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து நெய் விட்டு தேங்காயை பொன்னிறமாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு ரவையை வறுக்க வேண்டும்.

ஆரோக்கியமான முருங்கைக்கீரை திணை அடை தோசை… இரவு டின்னருக்கு பிளான் பண்ணுங்க…

நன்கு வறுத்ததும் காய்ச்சிய வெல்ல நீரை ஊற்றி கலந்துவிட வேண்டும்.

ரவை அரை வேக்காட்டில் இருக்கும்போது தேங்காயை தூவி கிளற வேண்டும். சிறு தீயில் வேக வையுங்கள்.

பக்கத்து அடுப்பில் கடாய் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி , திராட்சை, பாதாம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் தயார் செய்த கேசரியில் கொட்டி கிளறி அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவுதான் நாட்டு சர்க்கரையில் செய்த கேசரி சுட சுட தயார்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com