அனைத்து தரப்பு மக்களின் விருப்ப பானம் தேநீர். பணிபுரியும் இடத்திலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி… தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான தேநீரை தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல்படுத்திவிடும்.
அத்தகைய தேநீர் குறித்து, அடிக்கடி ஏதேனும் ஓர் ஆய்வு முடிவு வந்து டீ பிரியர்களை அச்சுறுத்தும். ஆனால், சமீபத்தில் தேநீரை அதிகளவு அருந்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து, இங்கிலாந்தில் ஆய்வாளர்கள் நடத்திய ஓர் ஆய்வின் முடிவுகள் வெளியாகி, தேநீர் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 2006 -2010 வரை, பிரிட்டனின் பயோபேங்கில் சேமித்து வைக்கப்பட்ட மனிதர்களின் தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 40 முதல் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 5,00,000 மேற்பட்டவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள், சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்டன. ஆய்வு செய்யப்பட்டதில் 80% பேர் பிளாக் டீ குடிப்பவர்கள். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் அருந்தும் நபர்களின் வாழ்நாள், தேநீர் அருந்தாத நபர்களின் வாழ்நாளை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, கிரீன் டீ குறித்து ஆராய்வதிலேயே முழுமையான கவனம் செலுத்துகிறது.
இந்த தேநீர் குறித்தான ஆய்வு முடிவுகள், தேநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மை – தீமைகள், தேநீருக்கு மாற்று பானம் என்ன என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதாவிடம் பேசினோம்…