கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்.பி மீது கட்சி நடவடிக்கை?- மு.க. ஸ்டாலின் ஆலோசனை

Share

கடலூர் எம்.பி.ரமேஷ் விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.

கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு(வயது 55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 19 தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். அதாவது கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் டி.ஆர்.வி.ரமேஷ் எம்.பியை தவிர்த்து மற்ற 5 பேரையும் நேற்று காலை பிடித்து கடலூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு 5 பேரிடமும் நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.  மேலும் இந்த வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கடலூர் எம்.பி. ரமேஷ் விவகாரம் குறித்து திமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடைபெற்றது.

இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வில்சன், ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண் துறை அமைச்சருமான எம்.ஆர.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக திமுக நிர்வாகியிடம் கேட்ட போது கொலை வழக்கு தொடர்பாக எம்.பி ரமேஷ் தரப்பிடமும் கருத்து கேட்கப்பட்டதாக தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவிற்கு பிறகே திமுக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com