* கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை ஒன்றிய அரசு காக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ் * நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த இருப்பதை வரவேற்கிறோம். – ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்* ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் நவதாராளமய கொள்கையில் நெடுஞ்சாலைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* மக்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கே அபராதம் போடும் விதமாகத்தான் ஒன்றியஅரசின் செயல்பாடுகள் உள்ளன. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சொல்லிட்டாங்க…
Share
