வட்லாப்பம், சுருட்டைப் பணியாரம், அரச இலை கடையல்|வித்தியாசமான வீக் எண்டு ஸ்பெஷல் | Vadlapam, Surutai Paniyaram, weekend recipes

Share

தேவையானவை:

அரச இலை கொழுந்து – 6 கைப்பிடி அளவு

துவரம்பருப்பு – ஒரு கப்

கடுகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – 15

காய்ந்த மிளகாய் – 5

சின்ன வெங்காயம் – 15

பூண்டு – 10 பல்

தக்காளி – 4

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரச இலை கடையல்

அரச இலை கடையல்

செய்முறை:

அரச இலை கொழுந்துகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

முதலில், தேவையான அளவு நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதற்குப் பின், நறுக்கிய வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும். அவை வெந்தவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளியும் வெங்காயமும் வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்க்கவும். ஊறவைத்த பருப்பு, தண்ணீர் சேர்க்கவும். பருப்பு வேக தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உப்பை சேர்த்துக்கொள்ளவும். பருப்பு பாதி வெந்தவுடன் அதனுடன் அரச இலை கொழுந்துகளைச் சேர்க்கவும். கலவை கொதித்துக்கொண்டிருக்கும்போது பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர், சீரகத்தை நசுக்கி மேலோட்டமாகப் போடவும். பருப்பும் இலையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நன்கு வெந்தவுடன், சூட்டிலேயே அவற்றைக் கடைந்து விட வேண்டும். சுவையான மணமணக்கும் அரச இலைக்கொழுந்து கடையல் தயார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com