பிரதமரின் புகைப்படம், தேசிய கொடியை நீக்கக் கோரி மனு! – News18 Tamil

Share

பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் நம்பிக்கை பத்திரம் மற்றும் அதன் இணையதள பக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்,புகைப்படம் , தேசியக் கொடி ஆகியவற்றை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் நிதி உதவி அளிப்பதற்காக பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. நன்கொடை அளிக்கப்படும் தொகைக்கு, 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,   கொரோனா தொற்று காலத்தில் சுகாதார அவசர தேவைகளுக்காகவும், மருத்துவ நல திட்டங்களுக்காகவும் ‘பி.எம்.,கேர்ஸ்’  (PM Cares )நிதி என்ற அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.

PM-CARES என்பது ஒரு பொது தொண்டு அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம், இது தனிப்பட்ட முறையில் செயல்படுகிறது மற்றும் அது சேகரிக்கப்பட்ட தொகை இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லாது. எனவே, பிரதமரின் பெயர் மற்றும் படம், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது சட்டங்கள் மற்றும் விதிகளை மீறுவதாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதவி பேராசிரியர் பணி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக மாணியக்குழு!

இந்த மனு நீதிபதிகள்ஏ.ஏ. சயீத், எஸ்.ஜி.திகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: பருவமழைக்குப் பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் – மத்திய அமைச்சர் நம்பிக்கை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com