சினிமா: இந்த வாரம் என்ன படங்கள், தொடர்களைப் பார்க்கலாம்?

Share

கோப்ரா

பட மூலாதாரம், @AJAYGNANAMUTHU

இந்த வாரம் விநாயக சதுர்த்தி வாரத்தின் நடுப்பகுதியில் வந்துவிட்டதால், வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படங்கள் வெளியாகிவிட்டன. ஓடிடி தளங்களில் வழக்கம்போல வெள்ளிக்கிழமையே படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. அப்படி என்னென்ன படங்கள், தொடர்கள் வெளியாகியுள்ளன?

கோப்ரா: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்தப் படம் புதன்கிழமையே வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மிக முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படும் நிலையில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார், ஏன் செய்கிறார்கள் என்பதுதான் கதை. வியாழக்கிழமையன்று படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருப்பதால், படத்திற்குக் கூடுதல் வரவேற்புக் கிடைக்குமென படக்குழு எதிர்பார்க்கிறது.

பட மூலாதாரம், TWITTER/@OFFICIALNEELAM

நட்சத்திரம் நகர்கிறது: பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமும் புதன்கிழமையே வெளியாகிவிட்டது. படத்தில் தென்படும் பிரச்சார நெடியும் நீளமும் பலவீனமான அம்சங்கள் என்றாலும், மிக முக்கியமாந திரைப்படங்கள் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், @Aparnabala2/Twitter

சுந்தரி கார்டன்ஸ் (மலையாளம்): அபர்ணா பாலமுரளி, ஷ்ருதி சுரேஷ், பினு பாப்பு நடித்த இந்தப் படம் சோனி லைவில் வெளியாகியுள்ளது. விவாகரத்து பெற்றுவிட்டு, பள்ளிக்கூட நூலகமொன்றில் பணியாற்றும் நாயகி, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வரும் நாயகன் மீது ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், அந்தக் காதல் கைகூடுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு எளிமையான, ஜாலியான திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள் இதைப் பார்க்கலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com