aval evening snacks recipes aval vadai and aval cutlet

Share

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து வந்த பண்டிகைகளில் பிரதானமாக வைத்து படைக்கப்பட்டது அவல்தான். இதை பெரும்பாலும் என்ன செய்வதென்று தெரியாமல் குப்பையில் போடலாம் அல்லது பறவைகளுக்கு வைக்கலாம். ஆனால் இனி அப்படி வாங்கி வீண் செய்ய வேண்டாம். இப்படி சுட சுட கிளைமேட்டிற்கு ஏற்ப மாலையில் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம். அப்படி அவல் வடை மற்றும் அவல் கட்லெட் செய்ய ரெசிபி இதோ….

தேவையான பொருட்கள்

அவல் – 1 கப்

கடலை மாவு – 2 tbsp

அரிசி மாவு – 2 tbsp

வெங்காயம் – 1

சீரகம் – 1 tsp

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

கருவேப்பிளை, கொத்தமல்லி – சிறிதளவு

மிளகாய் தூள் – 1/2 tsp

உப்பு – தே. அ

செய்முறை :

வெள்ளை அவலை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை நன்கு இறுகி எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சரியான அளவில் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

10 நிமிடத்தில் தேங்காய் கொழுக்கட்டை செய்வது எப்படி..? ரெசிபி இதோ…

பின் கடாய் வைத்து எண்ணெய் போதுமான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்தவுன் வடை போல் தட்டி அதில் போட்டு சுட்டு எடுங்கள்.

வடை பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் அவல் வடை தயார்.

அவல் கட்லெட் ரெசிபி

தேவையான பொருட்கள் :

அவல் – 1 கப்

உருளைக்கிழங்கு – 1/2 கப்

கேரட் – 1 சிறியது

பச்சை மிளகாய் – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 tsp

கொத்தமல்லி – சிறிதளவு

தயிர் – 2 tsp

உப்பு – தே.அ

மஞ்சள் – 1/4 tsp

மிளகாய் தூள் – 1/4 tsp

கரம் மசாலா – 1/4 tsp

எண்ணெய் – வறுக்க

செய்முறை :

அவலை தண்ணீரில் அலசி தனியாக வைத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளுங்கள். கேரட்டை சீவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் அரைக்கும் காரச்சட்னியை சுவையாக மாற்ற இப்படி செய்து பாருங்கள்

தற்போது அவலை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி பூண்டு பேஸ்ட் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தான சட்னி ரெசிபிகள்

மசாலாக்கள் நன்கு கலக்குமாறு பிசையுங்கள். உப்பு சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் அவற்றை தட்டையாக கட்லெட் போல் தட்டிக்கொள்ளுங்கள். தவா வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தவாவில் தடவுங்கள்.

பின் தட்டிய மாவுகளை வைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றி இரு புறமும் திருப்பிப் போட்டு வாட்டி எடுங்கள்.

அவ்வளவுதான் மொறு மொறு சுவையில் அவல் கட்லெட் தயார். இதற்கு டொமேட்டோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com