nuts payasam recipe | நட்ஸ் பாயாசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? சிம்பிளான ரெசிபி இதோ…. – News18 Tamil

Share

பாயாசம் என்றாலே அது சேமியா பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் என்ற வரையறைக்குள் முடிந்துவிடும். ஆனால் இன்று உணவில் பல கலைகள் வந்துவிட்டதால் தினம் தினம் பல வகையான ரெசிபீக்கள், டிஷுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பாயாசத்திலும் புதிய வகை பலராலும் பகிரப்படுகிறது. அதுதான் நட்ஸ் பயாசம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நீங்களும் சுவைக்க விரும்பினால் இதோ ரெசிபி..

தேவையான பொருட்கள் :

பாதாம் – 20 கிராம்

பிஸ்தா – 20 கிராம்

முந்திரி – 20 கிராம்

திராட்சை மற்றும் பேரிச்சை – 20 கிராம்

பால் – 1/2 லிட்டர்

சேமியா – 1/4 கப்

ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

சர்க்கரை – 1/4 கப்

நெய் – தே.அ

செய்முறை :

பாதாம் , பிஸ்தா என அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின் பால் காய்ச்சி அது நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து கிளை வேக வைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்திக்கு வாங்கிய அவல் மீந்துவிட்டதா..? அப்போ சுட சுட இந்த 2 ஸ்நாக்ஸ் செஞ்சிடுங்க…

வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்த்து கலக்க வேண்டும்.

பின் வறுத்த பருப்பு வகைகள் , திராட்சை , பேரிட்சை சேர்த்து கலந்துவிடுங்கள்.

அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com