சென்னையில் 2ம் தேதி அனைத்து மத தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம்: காதர்மொகிதீன் அறிவிப்பு

Share

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேச-நேச திருப்பயணம் என்ற பெயரில் அனைத்து மத தலைவர்களையும் ஒருங்கிணைத்து கருத்தரங்கம் வருகிற 2ம் தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை ராயபுரம் மேற்கு மாதா சர்ச் சாலையில் உள்ள ரம்ஜான் மஹாலில் கருத்தரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராகிய நான் தலைமை வகிக்கிறேன். கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி முன்னிலை வகிக்கிறார். கேரள மாநில தலைவர் சாதிக் அலி சிகாப் துவக்க உரையாற்றுகிறார்.

சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பங்கேற்கிறார்கள். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார், ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி, தலைமை காஜி முஹம்மது சலாஹுத்தீன் அய்யூபி, சுவாமி ஸ்ரீராகவேந்திர ஸ்ரீஹரி சுவாமி, பி.ஏ.காஜா முயீனுத்தீன், பியாரிலால் ஜெயின், அர்பஜன் சிங் சூரி, குலாம் முஹம்மது மெஹதிகான், புக்கு மௌரியா புத்தா, பேராயர் எஸ்றா. சற்குணம், பேராயர் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், பிஷப் கே.பி. எடிஸன், பிரம்மகுமாரி பி.கே.நிலிமா, சையிது நிஜாமிஷா, உள்ளிட்ட பல்வேறு மதத்தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com