`செவ்வந்தி’ நடிகை திவ்யாவுக்குத் திருமணம்; நீண்ட நாள் நண்பரும் நடிகருமான ஆர்னவை மணந்தார்! | Sevvanthi Actress Divya married her long time Actor Arnav

Share

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செல்லம்மா’ தொடரின் நாயகன் ஆர்னவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண பரிசு’ தொடரின் மூலம் புகழ் பெற்றவர் ஆர்னவ். திவ்யாவும், ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், ‘குட் நியூஸ்’ என இருவரும் திருமணம் செய்து கொண்டதை திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரிஜிஸ்டர் ஆபிஸில் இருவரும் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். திவ்யா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செவ்வந்தி’ என்கிற புதிய தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் திவ்யாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com