டெல்லி: திருமணம் மீறிய உறவு; 48 வயது பெண்ணின், 17 வயது மகளை இடைஞ்சல் எனக் கொன்ற 18 வயது இளைஞர்!

Share

டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஷ் (18). பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 48 வயது பெண்ணுடன் ஹரிஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்திருக்கிறார். ஹரிஷ் இந்த பெண்ணின் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தந்தை உயிருடன் இருக்கும் போதே, அம்மா வேறு ஒருவருடன் பழகுவது இந்த சிறுமிக்கு மனவேதனையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

கைது

தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் 17 வயது சிறுமியை கொல்ல முடிவெடுத்த ஹரிஷ், ஒரு பூங்காவில் வைத்து அந்த சிறுமியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இளைஞரிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றினர். மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காவல்துறையினர் ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com