தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வுக்கு நிபந்தனையுடன் தடை விதித்த உயர் நீதிமன்றம்: என்ன காரணம்?

Share

மின்கட்டண உயர்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மின்கட்டண கணக்கீடு – கோப்புப்படம்

இன்று (25.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்ற இங்கே தொகுத்து வழங்குகிறோம்).

தமிழ்நாட்டில் மி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை, நிபந்தனையுடன் கூடிய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.

ஆனால், தற்போது, “இந்த ஆணையத்தில், தலைவரும் ஒரு உறுப்பினரும் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்,” என்று கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com