“பிகினி ஆடை படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்ததால் வேலை இழந்தேன்” – கொல்கத்தா ஆசிரியை விவகாரம் விரிவான தகவல்

Share

  • கீதா பாண்டே
  • பிபிசி நியூஸ், டெல்லி

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஒரு புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மோசமான சர்ச்சையில் சிக்கியது.

செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியை ஒருவர் பிகினி உடையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக தான் வேலையை விட்டுச்செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

தனது பெயரைக்குறிப்பிட வேண்டாம் என்று கோரிய 31 வயதான அவர், பல்கலைக்கழக அதிகாரிகள் மீது”பாலியல் துன்புறுத்தல்” குற்றச்சாட்டுகளை சுமத்தினார். “தான் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும்,’ஒழுக்க கண்காணிப்பிற்கு’ உட்படுத்தப்பட்டதாகவும்,” அவர் கூறுகிறார்.

அவர் காவல்துறையில் புகார் அளித்து, பல்கலைக்கழகத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பல்கலைகழகம் அவர் மீது மானபங்க குற்றச்சாட்டை சுமத்தி 99 கோடி ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com