அமித் ஷாவின் காலணிகளை தூக்கிய பாஜக தலைவர் – ‘குஜராத் அடிமைகள்’ என்று விமர்சித்த டிஆர்எஸ்

Share

அமித் ஷா

தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் உள்ள கோவிலுக்கு சென்று வந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காலணிகளை மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார் எடுத்துக் கொடுத்த சம்பவம், சமூக ஊடகங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள், அமித் ஷாவையும் பாரதிய ஜனதா கட்சியினரையும் கடுமையாகச் சாடி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானாவில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செகந்தராபாத் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள உஜ்ஜைனி மகாகாளி மாதா தேவஸ்தானம் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தரிசனம் செய்தார். பிறகு அவர் கோவிலை விட்டு வெளியே வந்தபோது, அங்கு காலணி விடும் இடத்தில் இருந்த அமைச்சரின் காலணிகளை மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் எடுத்துக் கொடுக்க, அதை அணிந்தபடி அமித் ஷா செல்வது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் திங்கட்கிழமை காலையில் இருந்து வைரலானது.

இதையடுத்து, ஆளும் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்களில் ஒருவருமான கே.டி.ராமராவ், “தெலங்கானா பெருமை” என்ற ஹேஷ்டேக்குடன் சில இடுகைகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில் அவர், “டெல்லியின் காலணிகளை குஜராத்தின் அடிமைகள் சுமப்பதை மாநில மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் எந்த முயற்சியை அவர்கள் முறியடிப்பார்கள்,” என்று கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com