தேவையான பொருட்கள் :
நெய் – 1/4 tsp
அரிசி – 3 tsp
பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 1/2 கப்

செய்முறை :
முதலில் அரிசியை நன்கு கழுவி , துணியை விரித்து அதில் காய வையுங்கள்.
அடுத்ததாக கடாயில் கொஞ்சம் நெய் விட்டு அரிசியை சற்று பொன்னிறமாக வறுக்கவும். கருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக பாலை ஊற்றுங்கள். பால் நன்குக் கொதி வந்து அரிசியுடன் கலந்ததும் சிறு தீயில் வைத்துக்கொள்ளுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தியில் இனிக்கும் அன்பை பரிமாற அதிரசம் : பக்குவமாக செய்ய ரெசிபி இதோ…
தற்போது மெதுவாக பாயாசம் வேகட்டும். அடிக்கடி அடி பிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருங்கள்.
பால் சுண்டி, அரிசியும் வெந்திருந்தால் அடுத்ததாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். தாளிக்க கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி , திராட்சைகள் சேர்த்து வறுத்து பாயாசத்தில் கொட்டவும்.
அவ்வளவுதான் சுவையான பால் பாயாசம் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.