புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி கெளரவமாக ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்” – இரா.முத்தரசன் | muththarasan says pudhucherry cm should come out of bjp alliance

Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு புதுவையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாள் நடைபெற்றது. புதுச்சேரி பாக்கமுடையான்பெட் ஜீவா காலனியில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு CPI மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய CPI தமிழ்மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், “எப்படி பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தன் சொந்த அனுபவத்தால் பா.ஜ.க விட்டு நீங்கி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆட்சி அமைதாரோ அதேபோல் புதுவை முதல்வரும் கெளரவமாக பா. ஜ.க விட்டு ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” என்று பேசியது பாண்டிச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு

இதனைத் தொடர்ந்து, அ.மு.சலீம் பேசுகையில், “புதுவை ஆளுநர், புதுச்சேரி பொருளாதாரம் வளமாக உள்ளதென பொய்யுரைத்திருக்கிறார். ஆளுநருடைய பொருளாதாரம் தான் வளமாக உள்ளது. புதுச்சேரி மக்களுடைய பொருளாதாரம் வளமாக இல்லை. இது புதுவை முதல்வருக்கும் மக்களுக்கும் நன்றாக தெரியும்.

தமிழ்நாடு முதல்வர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். இந்த செய்தி வந்தவுடன் பலரும் பலவிதமாக பேசினர். அவர் டெல்லி செல்லும்முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய அக்கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணிவிழாவில் கலந்துகொண்டவர், `தான் முதலமைச்சர் என்னும் முறையில் மட்டும்தான் டெல்லி செல்லுகிறேன். அரசியல் ரீதியாக பா. ஜ.க வுக்கும் தி.மு.க வுக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என துணிச்சலாக சொல்லிவிட்டுதான் சென்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு

பா.ஜ.க எங்கெல்லாம் ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் இல்லையோ அங்கெல்லாம் ஒரு ஆளுநர் அமைத்து அங்கு நடக்கும் அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் செய்கிறது. புதுவை மற்றும் தமிழ்நாடு ஆளுநர்கள் அதைத்தான் செய்கின்றனர். ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கபட்டவர் அல்ல நியமிக்கப்பட்டவர். ஆனால், முதல்வர் ரங்கசாமி நியமிக்கப்பட்டவர் அல்ல மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர். ஏன் மோடி அரசுக்கு அடிமைபோல் உள்ளார். மோடி அரசால் அவருக்கு ஏற்படும் அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டு ஆட்சியில் இருக்க வேண்டுமா. எனவே, CPI கட்சியின் சார்பாக புதுச்சேரி மக்களின் தன்மானத்தை காப்பாற்ற புதுவை முதல்வர் ரங்கசாமி கெளரவமாக ஆட்சியில் இருந்து வெளியேறவேண்டும் என அவர் மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதை காரணமாக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்” என்று தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com