டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா?

Share

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்

மாத்திரை

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

“எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை”.

ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ – 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான இலவச பரிசுப்பொருட்களை அம்மாத்திரையை தயாரித்துவரும் நிறுவனம் வழங்கியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் வருமான வரித்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையின் அடிப்படையில் வெளியானவையாகும். இந்த வழக்கு விசாரணையின்போதும் வருமான வரித்துறையின் இந்த அறிக்கையின் விவரங்கள் மேற்கோள் காட்டப்பட்டன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com