Doctor Vikatan – சாப்பிட்ட உடன் பாத்ரூம் போகும் பழக்கம்… தீர்வு உண்டா?| Doctor Vikatan – habit of going to the bathroom after eating… is there a solution

Share

கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பு பலருக்கும் பெரிய தொந்தரவைத் தரக்கூடிய ஒரு பிரச்னை. அதனால் வெளியிடங்களில் சாப்பிடவே அவர்களுக்கு பயமாக இருக்கும்.

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் உணர்வு தொடர்ந்தாலோ, வயிறு உப்புசமாக இருந்தாலோ, மலம் கழிக்கும்போது சளியும், ரத்தமும் கலந்து வெளியேறினாலோ அவர்கள், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

இந்த பாதிப்பு உள்ளவர்கள் ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரமும் மிக முக்கியம். ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையில் நீண்டநேரம் இடைவெளி இருக்கக்கூடாது. போதுமான தூக்கம் மிக முக்கியம். 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

சாப்பிட்ட உடனே.. பிரச்னை

சாப்பிட்ட உடனே.. பிரச்னை

மனப்பதற்றத்தையும் ஸ்ட்ரெஸ்ஸையும் தவிர்த்தே ஆக வேண்டும். இதை ‘ கட்- பிரெயின் ஆக்சிஸ்’ (gut-brain axis ) என்று சொல்வோம்.

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ளோருக்கு, இரைப்பையில் அமிலம் அதிகம் சுரக்கும். அதன் விளைவாக அவர்களுக்கு கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பு ஏற்படலாம். சிகரெட் மற்றும் மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களை முறையாகக் கடைப்பிடித்தாலே கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com