இந்த சூழலில், உங்களின் தேசபக்தியை சமையலிலும் காண்பிக்க விரும்புவோருக்காக ராஜ்தானி உணவகத்தின் செப் 2 சுவையான ரெசிபிகளையும், எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார். இதோ உங்களுக்காக ரெசிபி லிஸ்ட்.
மூவர்ண லஸ்ஸி( Tiranga Lassi):
தேவையானப் பொருட்கள்:
கேசர் சிரப் (ஆரஞ்ச் நிறத்திற்காக) – இரண்டு தேக்கரண்டி
தயிர் – 3 கப் (வெள்ளை நிறத்திற்கு)
குஸ் சிரப்- இரண்டு தேக்கரண்டி (பச்சை நிறத்திற்கு)
ஏலக்காய் தூள்-ஒரு தேக்கரண்டி
சர்க்கரை – 3 தேக்கரண்டி

செய்முறை:
முதலில் தயிருடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் தனித்தனியாக 3 பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேசிய கொடியின் காவி நிறத்தைப் பெறுவதற்கு கேசர் சிரப்பை தயிருடன் கலக்கிக்கொள்ளவும். இதே போன்று பச்சை நிறத்திற்காக குஸ் சிரப்பை ஊற்றி லஸ்ஸியை கலக்கிக்கொள்ள வேண்டும். இதனையடுத்து முதலில் ஒரு கிளாஸில் பச்சை நிற லெஸ்ஸியை ஊற்ற வேண்டும். பின்னர் எந்த கலரும் கலக்காத வெள்ளை நிற லெஸ்ஸியையும், கடைசியில் காவி நிற லெஸ்ஸியை ஊற்ற வேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்தமான மூவர்ண கொடிப்போன்ற லெஸ்ஸி உங்களுக்கு கிடைத்துவிடும். இறுதியில் நீங்கள் தயாரித்து வைத்துள்ள லஸ்ஸியின் மேல் பிஸ்தா பருப்பை அலங்கலரித்து பரிமாறலாம்.
Also Read : ராகி லட்டு, ராகி பர்ஃபி… உடலுக்கு ஆற்றலை அளிக்கும் ராகி மாவில் செய்யப்படும் ருசியான ரெசிபி லிஸ்ட் இங்கே.!
தோக்லா (Tirangi Dhokla):
தேவையான பொருள்கள்:
ஊறவைத்த அரிசி – அரை கப்
உளுந்து – 1 கப்
தயிர் 1 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
கீரை ப்யூரி – தேவையான அளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் பெரிய பாத்திரத்தில் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலக்கி 3 பகுதியாக பிரித்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் மூவர்ண கொடிகளுக்கு தேவையான ஆரஞ்சு மாவை தயாரிக்க காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தக்காளி கெட்ச் அப் ஆகியவற்றை கலக்க வேண்டும்.
வெள்ளை நிறத்திற்கு மாவின் ஒரு பகுதியை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பச்சை நிறத்திற்காக கீரை துருவல், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுது போன்றவற்றை சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
பின்னர் தோக்லா தயார் செய்வதற்கு ஆரஞ்சு, பச்சை, வெள்ளை நிறத்தில் உருண்டையாக அல்லது உங்களுக்கப் பிடித்த வடிவில் செய்து வேக வைக்க வேண்டும்.
Also Read : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்…
இறுதியில் வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி ஆவியில் வேகவைத்துள்ள தோக்லாவை தாளித்து கொள்ள வேண்டும். பின்னர் தோக்லாவின் மீது மசாலாவை ஊற்றி துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலர்புல்லாக அலங்கரிக்கலாம்.
இதே போன்று தக்காளி சாதம், புதினா சாதம் மற்றும் வெள்ளை சாதத்தை கொண்டு மூவர்ணத்தில் புலாவ் செய்து சாப்பிடலாம். மேலும் மூவர்ணங்களில் காந்த்வி போன்றவற்றையும் நீங்கள் தயார் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.