அண்ணாமலை அறிவிப்பு – News18 Tamil

Share

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக  நேற்று பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன்  அவரை சந்தித்து மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில், சரவணனைகட்சியில் இருந்து நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர். அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட  சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், நள்ளிரவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சென்ற மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இனி பாஜகவில் தொடர விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சரவணனை பாஜகவில் இருந்து நீக்கி அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,  மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: செருப்புவீச்சு சம்பவம்: பாஜகவில் இருந்து சரவணன் விலகல்.. பிடிஆர்-ஐ சந்தித்து மன்னிப்புக் கோரினார்

ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com