yogurt side effects of curd is eating at night safe ayurveda explains

Share

ஒவ்வொரு உணவையும் இப்படித்தான் சாப்பிட வேண்டும், இந்த அளவில் தான் சாப்பிட வேண்டும், இந்த நேரத்தில் நாம் சாப்பிட வேண்டும் என்று நம்முடைய பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதம் வரையறுத்துள்ளது. ஒரு உணவு எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் சரி, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பொருந்தும். அதேபோல நேரம் தவறி அல்லது தவறான வேளையில் குறிப்பிட்ட உணவை சாப்பிட முடியாது.

மிக எளிதாக சொல்வதாக இருந்தால் காலையில் எழுந்த உடனே ஃபுல் மீல்ஸ் சாப்பிட முடியுமா? அதுபோலத்தான் ஒரு சில உணவுகளை குறிப்பிட்ட வேளையில் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் ஆயுர்வேத கூற்றுப்படி தயிரை இரவில் சாப்பிடக்கூடாது.

இந்திய வீடுகளில் தவறாமல் பயன்படுத்தப்படும் முக்கிய உணவுகளில் ஒன்று தயிர். தமிழ்நாட்டில் மதிய உணவில் தயிர் கட்டாயமாக இடம் பெறும். அதேபோல, வட இந்தியாவிலும் சப்பாத்தி, ரொட்டி, பராத்தா, ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக தயிரும் சாப்பிடுவார்கள். சிலர் கெட்டியான தயிராய் அப்படியே சாப்பிடுவார்கள். தயிர் என்பது இயற்கையான, உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் கொண்ட சுவையான புரோபயாடிக் உணவாகும். பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் தயிர் சாப்பிடுவது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதற்கு உதவுகிறது.

அதேபோல செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. பாலில் இருக்கும் புரத ஒவ்வாமை காரணமாக பால் பொருட்களை தவிர்ப்பவர்கள் தவிர்ப்பவர்கள் கூட தயிரை சாப்பிடலாம். ஏனென்றால் இதில் லாக்டிக் ஆசிட் உருவாக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் கனிமச்சத்துக்கள் கிரகிப்பை அதிகப்படுத்தவும், வயிற்றுப் பகுதியில் பாக்டீரியா தொற்று உருவாக்கத்தை தவிர்ப்பதற்கும் தயிர் உதவுகிறது.

தயிரில் இவ்வளவு நன்மைகள் இருந்தும், இரவு நேரத்தில் தயிர் சாப்பிடும் போது அது உடலுக்கு பாதகமாக மாறுகிறது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து ஆற்றல்களின் வெவ்வேறு கலவை ஆயுர்வேத உடல்கூறுகளான வாதம், பித்தம் மற்றும் கபம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பிரிவுகளும் ஒவ்வொருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது என்று ஆயுர்வேதம் வகைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சுவையிலும் இந்த ஆற்றல்கள் குறிப்பிட்ட அளவில் அதிகமாக காணப்படுகின்றன.

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை அதிகம் சாப்பிட்டால் இந்த விளைவுகள் உண்டாகும்

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதம் பரிந்துரைப்பதற்கான முக்கிய காரணம், இது மியூக்கஸ் எனப்படும் சளியை, அதாவது கபத்தை உருவாக்கும். ஆயுர்வேதம் ஒவ்வொரு உணவையும் குறிப்பிட்ட பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தி உள்ளது. அதன்படி தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு என்ற இரண்டு குணங்களுமே இருக்கின்றன. எனவே இரவு நேரத்தில் தயிரை சாப்பிடும் பொழுது சுவாசக் குழாய் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் சளி உருவாகும் என்று கூறுகிறது.

ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்கள் அனைத்து வகையான புளிப்பு சுவையுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் புளிப்பு சுவையான உணவுகளை சாப்பிடும் பொழுது ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு தீவிரமாகும். எனவே இவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

செரிமான கோளாறு அல்லது பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அனைவருமே இரவு நேரத்தில் எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். எனவே தயிர் என்பது செரிமானத்தை நிதானமாக்கும் என்பதால், தயிரை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் பொருட்களை செரிமானம் செய்ய முடியாது. ஆனால் இவர்கள் தயிர் சாப்பிடலாம். இருந்தாலும் மதிய நேரத்தில் சாப்பிடுவது மற்றும் அதுவும் குறைவான அளவில் உட்கொள்வது செரிமான பிரச்சனையை தீவிரமாக்காமல் பார்த்துக் கொள்ள உதவும்.

தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய் : இரண்டில் எது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது..?

ஏற்கனவே கூறியுள்ளது போல தயிர் இரவு நேரத்தில் சாப்பிட்டால் சளி உருவாகும். எனவே ஆஸ்துமா, அடிக்கடி சளித் தொந்தரவு இருப்பவர்கள், இரவு நேரத்தில் தயிர் சாப்பிடவே கூடாது.

ஒரு சிலருக்கு தயிரை தயிர் சாப்பிடும் போது மலச்சிக்கல் உருவாகலாம். அதற்கு காரணம் அவர்கள் அதிக அளவு தயிரை சாப்பிடுவதுதான். எனவே மதிய நேரத்தில் மட்டுமே தயிர் சாப்பிட்டால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com