பெரிமெனோபாஸ் பிரச்னையுடன் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் உள்ளதால் எடையைக் குறைப்பது கடினமாக உளளது. ஒரு நாளைக்கு 30 முதல் 40 நிமிடங்கள் என வாரத்துக்கு நான்கு நாள்கள் வாக்கிங் மட்டும் செய்தால் போதுமானதா? வேறு என்ன வழி?

பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்.
உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு, கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது எடைக் குறைப்பு முயற்சிக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது.

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆனால், எடைக்குறைப்பு முயற்சி சரியான பலன்களைத் தர வேண்டும் என்றால் அதற்கு முறையான உணவுக்கட்டுப்பாடும் அவசியம்.
கூடவே வாழ்வியல் மாற்றங்களும், ஆழ்ந்த உறக்கமும், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையும் அவசியம். உடற்பயிற்சிகளுடன் இவையெல்லாமும் சேர்த்துப் பின்பற்றப்பட வேண்டும்.

எனவே, நீங்கள் உங்கள் தைராய்டு அளவுகளைச் சரிபார்க்கவும் அதற்கான சரியான சிகிச்சைகளைப் பின்பற்றவும் மருத்துவரை அணுகுங்கள். பிறகு, டயட்டீஷியனின் உதவியோடு எடைக்குறைப்புக்கான உணவுமுறையைக் கேட்டுப் பின்பற்றுங்கள். இவையே போதுமானவை.