make recipe of thuvaram paruppu thuvaiyal

Share

மதிய உணவுக்கு பொருத்தமான பொரியல் இருப்பது சிறப்புதான் என்றாலும் அதோடு ஒரு ஸ்பூன் துவையலையும் தொட்டுக்கொண்டால் இன்னும் அந்த உணவு திருப்தியாக இருக்கும். அந்த வகையில் எளிமையாக செய்யக்கூடிய இந்த துவரம் பருப்பு துவையல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 4 tsp

நல்லெண்ணெய் – 2 tsp

பூண்டு பல் – 3

மிளகாய் வற்றல் – 7

சீரகம் – 1/4 tsp

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

துருவிய தேங்காய் – 1 கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

பெருங்காயத்தூள் – 1/2 tsp

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தட்டில் போட்டுக்கொள்ளுங்கள்.

பின் பூண்டு சேர்த்து வறுக்கவும். அடுத்ததாக காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும்.

காலை உணவுக்கு ஹெல்தியான சிவப்பு அவல் உப்புமா : ரெசிபி இதோ…

பின் , சீரகம் புளி, துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். அதோடு பெருங்காயத்தூளையும் தூவி வதக்க வேண்டும். கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக அனைத்தும் சூடு தணிந்து ஆறியதும் ஜாரில் அனைத்தையும் கொட்டி போதுமான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

சற்று கொரகொரப்பாக அரைப்பது வாயில் பருப்பு தட்டுப்படும்போது நன்றாக இருக்கும்.

அவ்வளவுதான் துவரம் பருப்பு துவையல் தயார்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com