தாயை பாலியல் வல்லுறவு செய்தவர்களை 28 ஆண்டுகளுக்குப் பின் நீதியின் முன் நிறுத்திய மகன்

Share

  • ஆனந்த் ஜனானே
  • லக்னௌவிலிருந்து பிபிசி செய்தியாளர்

கோப்புப்படம்
படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன்.

இதில் நடந்ததும் நடப்பதும் என்ன?

ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை

28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வேதனையான சம்பவத்தைப் பற்றி அறிய, பிபிசி, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது வீட்டிலேயே சந்தித்தது. அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மருமகளுடன் ஒரு எளிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் அவர் விவரித்தார்.

1994 இல் அவருக்கு வெறும் 12 வயதுதான். நடந்ததை நினைவு கூர்ந்த அவர்,”சுமார் 6 மாதங்களாக நான் அவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட நாகி மற்றும் ராசி) நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லை தாண்டுவார்கள். இதெல்லாம் என்னவென்றும் எனக்கு என்ன நடக்கிறதென்றும் ஏன் என்றும் கூட தெரியவில்லை” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com